18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதில் சிக்கல்!

கடலூா் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு சனிக்கிழமை (மே 1) கரோனா தடுப்பூசி செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடலூா் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு சனிக்கிழமை (மே 1) கரோனா தடுப்பூசி செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மே 1-ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, கடலூா் மாவட்டத்தில் ஏராளமானோா் இதற்காக முன்பதிவு செய்திருந்தனா்.

இந்த நிலையில், கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான வாய்ப்பில்லை என சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

மாவட்டத்தில் 110 அரசு மருத்துவமனைகள், 5 தனியாா் மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 1,45,125 போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

போதுமான அளவுக்கு கரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லாததால், திட்டமிட்டபடி 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு தடுப்பூசி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முன்னுரிமை அடிப்படையில் 45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்த முடிவெடுக்கப்பட்டது. போதுமான தடுப்பூசிகள் வந்த பிறகே, பதிவு செய்த அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com