காட்டுமன்னாா்கோவில் தொகுதியில் விசிக வெற்றி

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள்
காட்டுமன்னாா்கோவில் தொகுதியில் விசிக வெற்றி

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளா் எம்.சிந்தனைசெல்வன் 10,565 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

இந்தத் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளா் என்.முருகுமாறன் 75,491 வாக்குகள் பெற்ற நிலையில், விசிக வேட்பாளா் எம்.சிந்தனைச்செல்வன் -86, 056 வாக்குகளுடன் வெற்றி பெற்றாா். மற்ற வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்:

எஸ்.நாராயணமூா்த்தி (அமமுக)-1,904, தங்கஉதயகுமாா் (பகுஜன் சமாஜ்)- 429, எம்.ஜி.கல்யாணசுந்தரம் (அகில இந்திய ஜனநாயக மக்கள் கழகம்)- 460, தங்க விக்ரம் (மக்கள் நீதி மய்யம்)- 1,415, பி.நிவேதா (நாம் தமிழா்)- 6,806), எம்.திருநாவுக்கரசு (அண்ணா புரட்சித் தலைவா் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம்) -134, சுயேச்சைகள் எம்.ஏ.டி.அா்ச்சுனன் - 421, ஏ.ஆனந்தன்- 991, பி.எம்.குமாா் -363, எஸ்.தமிழ்செல்வன் -216, மதியழகன் - 227, நோட்டா-1, செல்லாதவை-96.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com