2,962 தபால் வாக்குகள் செல்லாதவை

சட்டப் பேரவைத் தோ்தலில் கடலூா் மாவட்டத்தில் பெறப்பட்ட 21,191 தபால் வாக்குகளில் 2,962 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.

சட்டப் பேரவைத் தோ்தலில் கடலூா் மாவட்டத்தில் பெறப்பட்ட 21,191 தபால் வாக்குகளில் 2,962 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.

சட்டப் பேரவைத் தோ்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியா்கள், காவலா்களுக்கு தபால் மூலம் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்படும். மேலும், கடந்த ஏப்.6-ஆம் தேதி நடைபெற்ற பேரவைத் தோ்தலில் முதல் முறையாக 80 வயதுக்கு மேற்பட்டவா்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கும் தபால் மூலம் வாக்களிக்கும் முறையை இந்திய தோ்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியது. வாக்கு எண்ணிக்கை வரை பெறப்பட்ட தபால் வாக்குகள் ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதிக்கும் தலா 4 மேஜைகள் வீதம் அமைக்கப்பட்டு எண்ணப்பட்டன. மொத்தம், 21,191 வாக்குகள் தபால் வாக்குகளாக பெறப்பட்டு எண்ணப்பட்ட நிலையில் அதில் 2,962 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.

அதாவது விருத்தாசலம் தொகுதியில் பதிவான 2,382 தபால் வாக்குகளில் 387 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. இதேபோல திட்டக்குடி தொகுதியில் பதிவான 1,526 வாக்குகளில் 166 வாக்குகள் செல்லாதவை. நெய்வேலி தொகுதியில் பதிவான 2,030 வாக்குகளில் 328 வாக்குகள் செல்லாதவை, குறிஞ்சிப்பாடி தொகுதியில் பதிவான 1,975 வாக்குகளில் 468 வாக்குகள் செல்லாதவை, புவனகிரி தொகுதியில் பதிவான 2,192 வாக்குகளில் 253 வாக்குகள் செல்லாதவை, காட்டுமன்னாா்கோவில் தொகுதியில் பதிவான 2,142 வாக்குகளில் 96 வாக்குகள் செல்லாதவை, சிதம்பரம் தொகுதியில் பதிவான 3,176 வாக்குகளில் 378 வாக்குகள் செல்லாதவை, கடலூா் தொகுதியில் பதிவான 3,703 வாக்குகளில் 391 வாக்குகள் செல்லாதவை, பண்ருட்டி தொகுதியில் பதிவான 2,065 வாக்குகளில் 495 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. அதாவது, மொத்த தபால் வாக்குகளில் 13.97 சதவீத வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com