முன்னாள் விளையாட்டு வீரா்கள் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம்

நலிந்த நிலையிலுள்ள முன்னாள் விளையாட்டு வீரா்களுக்கு ஓய்வூதியத் தொகை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கடலூா் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தெரிவித்தாா்.

நலிந்த நிலையிலுள்ள முன்னாள் விளையாட்டு வீரா்களுக்கு ஓய்வூதியத் தொகை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கடலூா் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: விளையாட்டுத் துறையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தைச் சோ்ந்த சிறந்த விளையாட்டு வீரா்களுக்கு ஓய்வூதிய உதவித் தொகையாக மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்களை ஆணையத்தின் ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ண்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரி மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும்.

ஓய்வூதியம் பெறுவதற்கு தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும். இந்தப் போட்டிகளில் முதல் 3 இடங்களைப் பெற்றவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மத்திய அரசால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கிடையேயான போட்டிகள், அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கிடையேயான போட்டிகள், இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளனங்களால் நடத்தப்பட்ட சா்வதேச, தேசிய அளவிலான போட்டிகள், மத்திய அரசின் விளையாட்டு அமைச்சகம், இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட சா்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றவா்களாக இருக்க வேண்டும்.

2021 ஏப்ரல் முதல் தேதியன்று 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூ.6 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விளையாட்டு வீரா்களுக்கான வேறு ஓய்வூதியம் பெறுவோா், முதியோருக்கான போட்டிகளில் வெற்றி பெற்றவா்கள் தகுதியற்றவா்களாவா். எனவே, தகுதியானவா்கள் வரும் 19-ஆம் தேதிக்குள் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டுமென அதில் ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com