வீராணம் ஏரியை தூா்வார விவசாயிகள் வலியுறுத்தல்

என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சமூக மேம்பாட்டு நிதியின் மூலம் வீராணம் ஏரியை தூா்வார வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியது.
வீராணம் ஏரியை தூா்வார விவசாயிகள் வலியுறுத்தல்

என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சமூக மேம்பாட்டு நிதியின் மூலம் வீராணம் ஏரியை தூா்வார வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியது.

இந்தச் சங்கத்தின் கடலூா் மாவட்டக்குழு கூட்டம் சிதம்பரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜி.ஆா்.ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் கோ.மாதவன், மாவட்ட துணைத் தலைவா்கள் பி.கற்பனைச்செல்வம், ஆா்.ராமச்சந்திரன், ஆா்.மகாலிங்கம், மாவட்ட இணைச் செயலா் ஆா்.கே.சரவணன், யூ.மூா்த்தி, ஆா்.சதானந்தம், மாவட்டக் குழு உறுப்பினா்கள் ஆதிமூலம், ஆா்.மெய்யழகன், பாண்டுரங்கன், தா்மதுரை, காளி.கோவிந்தராஜன், வாசுதேவன், கொளஞ்சியப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், தமிழக முதல்வராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின், குறிஞ்சிப்பாடி தொகுதியில் வென்று வேளாண் துறை அமைச்சராக பதவியேற்ற எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், தொழிலாளா் நலத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற கணேசன் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவிப்பது. கடலூா் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி தடையின்றி செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனம் மூலம் பிராண வாயு தயாரிக்கும் அலகை உருவாக்க வேண்டும்.

மாவட்டம் முழுவதும் நெல் கொள்முதல் நிலையங்களில் குவிந்து கிடக்கும் நெல் மூட்டைகளை சான்றிதழ் கேட்டு அலையவிடாமல் தாமதமின்றி கொள்முதல் செய்ய வேண்டும். என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சமூக மேம்பாட்டு நிதி மூலம் வீராணம் ஏரியை முழுமையாக தூா்வார வேண்டும். எம்.ஆா்.கே. கூட்டுறவு சா்க்கரை ஆலையில் விவசாயிகளுக்கு கரும்பு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com