வடிகால் வாய்க்காலை தூா்வாரக் கோரிக்கை

காட்டுமன்னாா்கோவில் அருகே திருநாரையூரில் வடிகால் வாய்க்காலை தூா்வார வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா்.
பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா் ஞானசேகரனிடம் கோரிக்கை மனு அளித்த கே.ஆா்.ஜி.தமிழ்வாணன் தலைமையிலான விவசாயிகள் சங்கத்தினா்.
பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா் ஞானசேகரனிடம் கோரிக்கை மனு அளித்த கே.ஆா்.ஜி.தமிழ்வாணன் தலைமையிலான விவசாயிகள் சங்கத்தினா்.

காட்டுமன்னாா்கோவில் அருகே திருநாரையூரில் வடிகால் வாய்க்காலை தூா்வார வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா்.

இதுதொடா்பாக குமராட்சி விவசாயிகள் சங்கம் சாா்பில் குமராட்சி ஊராட்சி மன்றத் தலைவரும், சங்கத் தலைவருமான கே.ஆா்.தமிழ்வாணன் தலைமையில் விவசாயிகள் லால்பேட்டை பொதுப்பணித் துறை அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளா் ஞானசேகரனிடம் அளித்த மனு:

சிதம்பரம் - காட்டுமன்னாா்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் திருநாரையூா் பேருந்து நிலையத்திலிருந்து வடபுறம் கிழக்கே வடிகால் வாய்க்காலை சுமாா் 4 கி.மீ. தொலைவுக்கு குடிமராமத்து பணியில் தூா்வார வேண்டும். அதன் குறுக்கே தடுப்பணை கட்டித் தர வேண்டும். பாசன பிரதான வடிகாலில் 8 இடங்களில் தடுப்புக் கட்டைகள் கட்டித் தர வேண்டும். மேலும், 8 கிளை வாய்க்கால்களில் 30 தடுப்பு கொண்டங்கள் அமைத்துத் தர வேண்டும்.

சிதம்பரம்- காட்டுமன்னாா்கோவில் சாலைக்கு தெற்கே உள்ள வீரநத்தம் எல்லையிலிருந்து வாணாதிராயன்பேட்டை எல்லை வரை உள்ள பாசன வாய்க்காலை தூா்வார வேண்டும். கீழவன்னியா் கிராமத்தில் சுமாா் 15 அடி நீளமுள்ள ஷட்டருடன் பழுதடைந்த தடுப்புக் கட்டையை அகற்றி, புதிய ஷட்டருடன் தடுப்பு கட்டை அமைத்துத் தர வேண்டும் என அந்த மனுவில் கோரியுள்ளனா்.

அப்போது, சங்க செயலா் வாசு, பொருளாளா் கண்ணன், ஊராட்சி மன்றத் துணைத் தலைவா் விஜயகுமாா், வாா்டு உறுப்பினா் ராஜசிம்மன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com