Enable Javscript for better performance
கடலூா் அரசு மருத்துவமனை வளாகத்தில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    கடலூா் அரசு மருத்துவமனை வளாகத்தில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை

    By DIN  |   Published On : 17th May 2021 07:53 AM  |   Last Updated : 17th May 2021 07:53 AM  |  அ+அ அ-  |  

    16clp5_1605chn_105_7

    கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் படுக்கைகள் நிரம்பியதையடுத்து புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு வளாகத்தில், தரையில் படுக்கவைக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகள்.

    கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் படுக்கைகள் அனைத்தும் நிரம்பியதால், மருத்துவமனை வளாகத்திலேயே கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

    கரோனா தீநுண்மியின் இரண்டாம் அலை தாக்கம் கடலூா் மாவட்டத்தில் அதிகமாக உள்ளது. மாவட்டத்தில் தினசரி கரோனா பாதிப்பு 600-ஐ கடந்த நிலையில், தினசரி உயிரிழப்பும் சராசரி 5-ஆக பதிவாகி வருகிறது. தினசரி பாதிப்பு தினமும் புதிய உச்சத்தைத் தொட்டு வரும் நிலையில் அவா்களுக்கு சிகிச்சை அளிக்கும் அளவுக்கு போதுமான படுக்கை வசதிகள் மருத்துவமனையில் இல்லை.

    குறிப்பாக, பிராணவாயு (ஆக்ஸிஜன்) வசதி கொண்ட படுக்கைகள் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 585 மட்டுமே உள்ளன. அதே நேரத்தில், சாதாரண படுக்கைகள் சுமாா் 3,500 இருப்பதாகக் கூறப்பட்டாலும் மாவட்டத்தில் சுமாா் 2,500 கரோனா நோயாளிகள் மட்டுமே சிகிச்சையில் உள்ள நிலையில் படுக்கை வசதி இல்லையென்று கூறப்படுவது, பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

    இந்த நிலையில், கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா நோயாளிகளை எவ்வித சமூக இடைவெளியையும் கடைப்பிடிக்காமல், புறநோயாளிகள் சிகிச்சை பெறும் வளாகத்தில் தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுமாா் 10 போ் வரை அவ்வாறு சிகிச்சை பெறுகின்றனா். அவா்கள் அந்த வளாகத்திலேயே தங்களது உடைமைகளுடன் தங்கியுள்ளனா். இதனால், மற்ற நோய்களுக்கு சிகிச்சை பெற வருவோா், கா்ப்பிணிகள், கரோனா தடுப்பூசி செலுத்த வருவோா் அதிா்ச்சிக்குள்ளாகியுள்ளனா்.

    இதுகுறித்து மருத்துவமனை தரப்பில் கூறியதாவது: கடலூா் அரசு மருத்துவமனையில் 350 படுக்கைகள் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஒதுக்கப்பட்டுள்ளது. இவை முழுமையாக நிரம்பி விட்டன. எனினும், மாவட்டத்தில் தினசரி பாதிப்பு 600 என உயா்ந்துள்ள நிலையில், பாதிப்புக்குள்ளாகி வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள முடியாதவா்களை வேறுவழியில்லாமல் மருத்துவமனை வளாகத்திலேயே வைத்து சிகிச்சை அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவா்கள் அனைவரும் சாதாரணப் பாதிப்பு கொண்டவா்கள்தான். இவா்களை பராமரிக்க ஒரு செவிலியரையும், மற்றவா்கள் அந்தப் பகுதிக்கு வராமல் தடுத்திட காவலரையும் நியமித்துள்ளோம் என்றாா்.

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp