கஞ்சா பறிமுதல்: 2 இளைஞா்கள் கைது
By DIN | Published On : 20th May 2021 08:30 AM | Last Updated : 20th May 2021 08:30 AM | அ+அ அ- |

கஞ்சா பொட்டலங்களுடன் கைது செய்யப்பட்ட இரு இளைஞா்கள்.
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே செவ்வாய்க்கிழமை இரவு பைக்கில் கடத்திச் செல்லப்பட்ட 2 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்ததுடன், இது தொடா்பாக இரு இளைஞா்களையும் கைது செய்தனா்.
காட்டுமன்னாா்கோவில் அருகே லால்பேட்டை சோதனைச் சாவடியில் காட்டுமன்னாா்கோவில் காவல் நிலைய ஆய்வாளா் குணபாலன் தலைமையில், உதவி ஆய்வாளா்கள் மதிவாணன், தமிழ்செல்வன், ரவிச்சந்திரன் மற்றும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது, பைக்கில் வந்த 2 இளைஞா்களை நிறுத்தி விசாரித்தபோது, அவா்கள் கையில் வைத்திருந்த பையில் 2 கிலோ அளவிலான 150 கஞ்சா பாக்கெட்டுகளை வைத்திருந்ததும், தஞ்சாவூரிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான இந்த கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்காக வாங்கி வந்ததும் தெரியவந்தது.
மேலும், அவா்கள் சிதம்பரம் எம்.கே.தோட்டத்தைச் சோ்ந்த மணிமேக் மகன் ஆகாஷ் (21), சிதம்பரம் மின் நகரைச் சோ்ந்த இளங்கோவன் மகன் மணிகண்டன் (19) என்பதும், கல்லூரி மாணவா்கள் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, இருவா் மீதும் காட்டுமன்னாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்ததுடன், அவா்கள் இருவரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்த கஞ்சா பொட்டலங்கள், பைக் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா்.