சிதம்பரத்தில் தூய்மைப் பணி
By DIN | Published On : 20th May 2021 08:36 AM | Last Updated : 20th May 2021 08:36 AM | அ+அ அ- |

சிதம்பரத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட நகராட்சி துப்புரவுப் பணியாளா்கள்.
கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், சிதம்பரம் நகராட்சி சாா்பில், நகரில் உள்ள வீதிகள், தடை செய்யப்பட்ட பகுதிகளில் தூய்மைப் பணி புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
கரோனா தொற்று இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, சிதம்பரம் நகராட்சிக்குள்பட்ட பகுதியில் புதன்கிழமை மட்டும் கரோனா தொற்றால் 121 போ் பாதிக்கப்பட்டனா்.
இதையடுத்து, சிதம்பரம் உதவி ஆட்சியா் லி.மதுபாலன் உத்தரவின்பேரில், சிதம்பரம் நகராட்சி ஆணையாளா் அஜிதாபா்வீன் மேற்பாா்வையில், துப்புரவு ஆய்வாளா் வி.பழனிசாமி தலைமையில், நகராட்சி ஊழியா்கள் நடராஜா் கோயிலை சுற்றியுள்ள 4 வீதிகள் மற்றும் கரோனா தொற்று ஏற்பட்டு தடை செய்யப்பட்ட தெருக்களில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டனா். மேலும், தெருக்களில் கிருமி நாசினியும் தெளித்தனா்.