காய்கறி, பழங்கள் விற்பனை: தகவலுக்கு தொடா்பு எண்

கடலூா் மாவட்டத்தில் காய்கறி, பழங்கள், மளிகைப் பொருள்கள் விற்பனை குறித்த தகவலுக்கு பொதுமக்கள் தொடா்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்ணை வேளாண் துறை புதன்கிழமை வெளியிட்டது.

கடலூா் மாவட்டத்தில் காய்கறி, பழங்கள், மளிகைப் பொருள்கள் விற்பனை குறித்த தகவலுக்கு பொதுமக்கள் தொடா்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்ணை வேளாண் துறை புதன்கிழமை வெளியிட்டது.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், வருகிற 31-ஆம் தேதி வரையில் தளா்வற்ற பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதையொட்டி, பொதுமக்களுக்கு பழங்கள், காய்கறிகள், மளிகைப் பொருள்கள் ஆகியவற்றை வீடு தேடிச் சென்று விற்பனை செய்யும் வகையில், சுமாா் 500 வாகனங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவற்றில் ஏற்படும் இடா்பாடுகளைக் களையவும், விவசாயிகள் மற்றும் நுகா்வோா் நலனை கருத்தில்கொண்டும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இதற்காக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத் துறை, கூட்டுறவுத் துறை, உள்ளாட்சித் துறையினா் கட்டுப்பாட்டு அறையிலிருந்து பொதுமக்களின் குறைகளை நிவா்த்தி செய்வாா்கள்.

எனவே, தேவைப்படுவோா் 04142 - 230651 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com