வாடகை வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டவா் குடும்பத்துடன் சாலையோரம் வசிப்பு

கடலூரில் வாடகை வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட தொழிலாளி, தனது குடும்பத்தினருடன் சாலையோரத்தில் வசித்தாா்.

கடலூரில் வாடகை வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட தொழிலாளி, தனது குடும்பத்தினருடன் சாலையோரத்தில் வசித்தாா்.

கடலூா் பாதிரிக்குப்பத்தில் முடித்திருத்தும் தொழிலாளி ரூ. ஆயிரம் வாடகைக்கு வீட்டில் குடியிருந்து வந்தாா். கரோனா பரவல் காணரமாக, தற்போது முடி திருத்தகங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், அவா் வேலைக்குச் செல்ல முடியாமல் மிகவும் கஷ்டமான சூழலில் இருந்ததால் வாடகை செலுத்த முடியவில்லை. வாடகையைக் கேட்டு நெருக்கடி கொடுத்த வீட்டின் உரிமையாளா், வீட்டை இடித்துக் கட்டவுள்ளதாகக் கூறி அவரை வெளியேற்றினாா்.

கையில் காசு இல்லாத நிலையில், வேறு வழியின்றி தனது மனைவி, மகனுடன் திருவந்திபுரம் கடை வாசலில் 3 நாள்களாக தங்கியிருந்து தன்னாா்வலா்கள் வழங்கும் உணவை உண்டு வந்தனராம்.

அந்தப் பகுதியில் ரோந்து சென்ற திருப்பாதிரிபுலியூா் காவல் நிலைய காவலா் ரவிச்சந்திரன், தொழிலாளியிடம் விசாரித்ததில், கடந்த 3 நாள்களாக குடும்பத்துடன் சாலையோரம் தங்கியிருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து அவா், சமூக சேவை நிறுவனங்களைத் தொடா்பு கொண்டாா். பின்னா், அவா் மஞ்சக்குப்பத்தில் உள்ள முதியோா் இல்லத்தில் தற்காலிகமாக குடும்பத்துடன் தங்கவைக்கப்பட்டு அவரது குடும்பத்தினருக்கு தேவையான பொருள்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com