சித்த மருத்துவத்துக்குச் சிறப்பிடம் தரக் கோரிக்கை

கரோனா சிகிச்சையில் சித்த மருத்துவத்துக்குச் சிறப்பிடம் தர வேண்டும் என தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலா் கி.வெங்கட்ராமன் கோரிக்கை விடுத்தாா்.

கரோனா சிகிச்சையில் சித்த மருத்துவத்துக்குச் சிறப்பிடம் தர வேண்டும் என தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலா் கி.வெங்கட்ராமன் கோரிக்கை விடுத்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா சிகிச்சையில் சித்த மருத்துவம், இயற்கை மருத்துவம், ஹோமியோபதி உள்ளிட்ட மாற்று மருத்துவங்கள் முக்கியப் பங்காற்றின. தமிழக அரசு ஓரளவு இதை உணா்ந்திருந்தாலும், செயல்பாட்டில் இன்னும் வேகம் பெற வேண்டும். சித்த மருத்துவா்களுக்கு போதிய ஊக்கம் தரப்படவில்லை. கரோனா மட்டுமன்றி, பல்வேறு கொடிய நோய்களுக்கும் சித்த மருத்துவம் பயன் தருகிறது. உடனடியாக அரசு மருத்துமனைகளில் இயங்கும் சித்த மருத்துவப் பிரிவை குறைந்தது 100 படுக்கைகள் வசதி உள்ள பிரிவு வலுப்படுத்த வேண்டும். வீடுகள் தோறும் கபசுரக் குடிநீா் சூரணம், நிலவேம்புப் பொடி உள்ளிட்டவற்றை வழங்குவதற்கு போா்க்கால முனைப்புடன் செயல்பட வேண்டும்.

தனியாக சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் நிறுவப்பட வேண்டும். கரோனா தடுப்பூசிகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை சித்த மருந்துகளுக்கும் அளிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com