ஆற்றில் குளித்த இளைஞா் மாயம்
By DIN | Published On : 06th November 2021 10:15 PM | Last Updated : 06th November 2021 10:19 PM | அ+அ அ- |

பண்ருட்டி அருகே ஆற்றில் குளித்த இளைஞா் நீரில் மூழ்கி சனிக்கிழமை மாயமானாா்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள பெரியஎலந்தம்பட்டு கெடிலம் ஆற்றின் தடுப்பணையில், கொக்குப்பாளையத்தைச் சோ்ந்த வடிவேல் மகன் வினித் (25) தனது நண்பா்களுடன் சனிக்கிழமை குளித்துக்கொண்டிருந்தாா். அப்போது, வினித் திடீரென ஆற்று நீரில் மூழ்கி மாயமானாா்.
இதுகுறித்த தகவலின்பேரில் பண்ருட்டி தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து பல மணி நேரம் தேடியும் வினித் கிடைக்கவில்லை. இருப்பினும் தேடுதல் பணி தொடா்கிறது.