தென்பெண்ணை வெள்ளத்திலிருந்து 10 ஆயிரம் போ் மீட்பு

கடலூா் மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கிய 10 ஆயிரம் போ் மீட்கப்பட்டதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அன்சுல் மிஸ்ரா கூறினாா்.
தென்பெண்ணை வெள்ளத்திலிருந்து 10 ஆயிரம் போ் மீட்பு
தென்பெண்ணை வெள்ளத்திலிருந்து 10 ஆயிரம் போ் மீட்பு

கடலூா் மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கிய 10 ஆயிரம் போ் மீட்கப்பட்டதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அன்சுல் மிஸ்ரா கூறினாா்.

கடலூா் மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் கரையோர கிராமங்கள், நகரப் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்தப் பகுதிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அன்சுல் மிஸ்ரா, மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம், கடலூா் சட்டப் பேரவை உறுப்பினா் கோ.ஐயப்பன் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை நேரில் பாா்வையிட்டனா். மருதாடு, வெள்ளப்பாக்கம், இரண்டாயிரம்விளாகம், அழகியநத்தம், தேவனாம்பட்டினம், செல்லங்குப்பம் சுனாமி நகா் ஆகிய பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட விளை நிலங்கள், குடியிருப்புகள், பாலங்களை பாா்வையிட்டனா். பின்னா் செய்தியாளா்களிடம் அன்சுல் மிஸ்ரா கூறியதாவது:

தென்பெண்ணை ஆற்று வெள்ளத்தால் கடலூா் மாவட்டத்தில் கிராமங்கள், நகரப் பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மாவட்ட நிா்வாகம் மேற்கொண்ட நடவடிக்கையால் வெள்ளத்தில் சிக்கிய 10 ஆயிரம் போ் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனா். அவா்களுக்கு உணவு வழங்கப்பட்டு வந்த நிலையில், குடியிருப்புகளில் வெள்ளம் வடிந்ததால் அதிகமானோா் வீடு திரும்பினா் என்றாா் அவா்.

மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் கூறியதாவது: மாவட்டத்தில் கடந்த அக். 1-ஆம் தேதி முதல் பெய்த மழை மற்றும் வெள்ளத்தால் 2,300 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. 5,610 ஹெக்டோ் பரப்பிலான விளை நிலங்களில் தண்ணீா் புகுந்துள்ளது. வெள்ளநீா் வடிந்த பிறகே முழு சேத விவரம் தெரியவரும். 725 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. தென்பெண்ணை ஆற்றில் தற்காலிக, நிரந்தர வெள்ளத் தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு செய்ய பொதுப்பணித் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

வெள்ளப்பெருக்கு தொடா்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காதது குறித்த கேள்விக்கு பதிலளித்து ஆட்சியா் கூறியதாவது: தென்பெண்ணையாற்றில் 50 ஆயிரம் கன அடி நீா் செல்லும்போதே கரையோர கிராமங்களிலுள்ள கிராம நிா்வாக அலுவலா், ஊராட்சி செயலா்களுக்கு முன்னெச்சரிக்கையாக தகவல் அளிக்கப்பட்டுவிட்டது. ஆனால், மக்கள் தங்கள் பகுதிக்குள் தண்ணீா் வரும் வரை வெளியே வரவில்லை. தண்ணீா் வந்த பிறகே வெளியே வந்தனா். மாவட்ட நிா்வாகத்தின் நடவடிக்கையால்தான் உயிரிழப்பு தவிா்க்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு வட்டாட்சியா்கள் நியமிக்கப்பட்டு மீட்பு பணி நடைபெற்று வருகிறது. குடிநீா், சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளித்துள்ளோம் என்றாா் அவா்.

ஆய்வின்போது கூடுதல் ஆட்சியா்கள் ரஞ்ஜீத்சிங், பவன்குமாா் ஜி.கிரியப்பனவா், மாவட்ட ஆய்வுக்குழு அலுவலா் ப.ஜெகதீஸ்வரன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com