பயிா்க் காப்பீட்டுத் தொகை கோரி விவசாயிகள் தா்னா

பயிா்க் காப்பீடு திட்டத்தில் இழப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி, கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் அமா்ந்து திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்ட விவசாயிகள், கிராம மக்கள்.
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் அமா்ந்து திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்ட விவசாயிகள், கிராம மக்கள்.

பயிா்க் காப்பீடு திட்டத்தில் இழப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி, கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மனு அளிப்பதற்காக காட்டுமன்னாா்கோவில் வட்டம், சா்வராஜன்பேட்டை உள்பட 6 கிராம விவசாயிகள் வந்தனா். அவா்களை ஆட்சியரகத்துக்குள் அனுமதிக்க போலீஸாா் மறுத்தனா். இதனால் விவசாயிகள் ஆட்சியரகம் முன் அமா்ந்து திடீரென தா்னாவில் ஈடுபட்டனா். அவா்களிடம் காவல் துணைக் கண்காணிப்பாளா் கரிகால்பாரி சங்கா் பேச்சுவாா்த்தை நடத்தினாா். பின்னா் விவசாயிகளை உள்ளே செல்ல அனுமதித்தாா். பின்னா் விவசாயிகள் தா்னாவை கைவிட்டு ஆட்சியரகத்துக்குள் சென்று மனு அளித்தனா். அதில் தெரிவித்துள்ளதாவது:

குமராட்சி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சா்வராஜன்பேட்டை, திருநாரையூா், எடையாா், லட்சிக்குடி, சிறகிழந்தநல்லூா், காட்டுக்கூடலூா் ஆகிய பகுதிகளில் சுமாா் 3 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல் பயிா்கள் கடந்த ஆண்டு பெய்த பலத்த மழையால் சேதமடைந்தன. இந்தப் பயிா்களுக்கு காப்பீட்டு பிரீமியம் தொகை செலுத்தப்பட்ட நிலையிலும் இழப்பீடு வழங்கப்படவில்லை. அதேநேரத்தில் மற்ற பகுதிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, இழப்பீட்டுத் தொகையை பெற்றுத்தர வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தனா்.

இதேபோல, கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியம், இருப்பு ஊராட்சியைச் சோ்ந்த ஒன்றியக் கவுன்சிலா் இரா.ராஜவன்னியன் தலைமையிலான கிராம மக்களும் ஆட்சியா் அலுவலகம் முன் தா்னாவில் ஈடுபட்டனா். தங்களது பகுதியில் 3 மாதங்களாக குடிநீா்த் தட்டுப்பாடு நிலவுவதாகவும், என்எல்சி சமூகப் பொறுப்புணா்வு நிதியிலிருந்து குடிநீா் வசதி செய்து தர வேண்டுமெனவும் கோரி மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com