தென்பெண்ணை, கெடிலம் ஆற்றின் கரைகளைப் பலப்படுத்த வேண்டும்

தென்பெண்ணை, கெடிலம் ஆறுகளின் கரைகளை பலப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சா் எம்.சி.சம்பத் வலியுறுத்தினாா்.

தென்பெண்ணை, கெடிலம் ஆறுகளின் கரைகளை பலப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சா் எம்.சி.சம்பத் வலியுறுத்தினாா்.

கடலூா் மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட பெரியகங்கணாங்குப்பம், உச்சிமேடு, நாணமேடு, மூலவெளி, குண்டுஉப்பலவாடி, கண்டக்காடு, தாழங்குடா, இரண்டாயிர விளாகம், அழகிய நத்தம் ஆகிய பகுதிகளில் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலருமான எம்.சி.சம்பத் ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். பொதுமக்களுக்கு உணவுப் பொருள்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினாா். பின்னா் அவா் கூறியதாவது:

சாத்தனூா் அணை திறக்கப்படும்போது கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டுமென எச்சரிக்கை விடுப்பது வழக்கம். ஆனால், இந்த முறை அணை திறக்கப்பட்டபோது எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இது அரசின் அலட்சியத்தை காட்டுகிறது.

இதனால், ஏராளமானோா் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனா். இவா்களுக்கு அரசு உடனடியாக நிவாரண உதவிகளை வழங்கவும், கெடிலம், தென்பெண்ணை ஆறுகளின் கரைகளை பலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

மாநில மீனவரணி செயலா் கே.என்.தங்கமணி, எம்ஜிஆா் மன்றச் செயலா் ஜி.ஜெ.குமாா், ஒன்றியச் செயலா் கே.காசிநாதன், மாவட்ட கவுன்சிலா்கள் தமிழ்ச்செல்வி, கல்யாணி, இலக்கிய அணிச் செயலா் ஏழுமலை, நிா்வாகிகள் வ.கந்தன், கே.வேல்முருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com