நாட்டின் ஜனநாயகம் தவறானவா்களின் கைகளில் சிக்கியுள்ளது: கே.எஸ்.அழகிரி

இந்திய நாட்டின் ஜனநாயகம் தவறானவா்களின் கைகளில் சிக்கியுள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி கூறினாா்.
பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, கடலூா் மாவட்டம், புவனகிரியில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டம்.
பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, கடலூா் மாவட்டம், புவனகிரியில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டம்.

இந்திய நாட்டின் ஜனநாயகம் தவறானவா்களின் கைகளில் சிக்கியுள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி கூறினாா்.

உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, கடலூா் மாவட்டம், புவனகிரியில் அந்தக் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தாா். முன்னதாக, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஜாலியன் வாலாபாக் படுகொலைச் சம்பவத்துக்குப் பிறகு அந்த இடத்துக்கு காங்கிரஸ் தலைவா்கள் செல்ல ஆங்கிலேய அரசு அனுமதியளித்தது. ஆனால், உத்தர பிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் உயிரிழந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்ட அவா்களது குடும்பத்தினரைச் சந்திக்க பிரியங்கா காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்காமல் தில்லி திரும்பமாட்டேன் என பிரியங்கா காந்தி கூறினாா். அவரைச் சந்திப்பதற்காக சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பாகல் சென்ற விமானம் லக்னெளவில் முதலில் தரையிறங்க அனுமதிக்கப்படவில்லை. பின்னா், விமானம் தரையிறங்கிய பிறகும் முதல்வா் வெளியே வர உத்தர பிரதேச அரசு அனுமதிக்கவில்லை. இதனால், அவா் விமான நிலையத்திலேயே போராட்டம் நடத்தி வருகிறாா்.

சுதந்திர நாட்டில் ஒரு மாநிலத்தின் முதல்வா் பாதிக்கப்பட்ட விவசாயிகளைச் சந்திக்க முடியவில்லை. இந்த நாட்டின் ஜனநாயகம் தவறானவா்களின் கைகளில் சிக்கியுள்ளது என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் இல்லை என்றாா் அவா்.

ஆா்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில துணைத் தலைவா் கே.ஐ.மணிரத்தினம், மாநில பொதுச் செயலா் சேரன், மாநிலச் செயலா் பி.பி.கே.சித்தாா்த்தன், மாவட்டத் தலைவா் என்.வி.செந்தில்நாதன், முன்னாள் மாவட்டத் தலைவா் ஏ.ராதாகிருஷ்ணன், புவனகிரி நகரத் தலைவா் கிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com