நெல் கொள்முதலுக்கு இணையவழி பதிவு: விவசாயிகள் அதிருப்தி

அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை விற்க இணைய வழியில் (ஆன்-லைன்) பதிவு செய்யும் நடைமுறையால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனா்.

அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை விற்க இணைய வழியில் (ஆன்-லைன்) பதிவு செய்யும் நடைமுறையால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனா்.

தமிழக அரசு விவசாயிகளின் நலன் கருதி தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அமைத்து ஆண்டுதோறும் குறுவை, சம்பா சாகுபடி பருவங்களுக்கு ஏற்ப நெல் கொள்முதல் செய்து வருகிறது. இந்த நிலையில், அரசு அமல்படுத்தியுள்ள இணையவழியில் பதிவுசெய்யும் புதிய நடைமுறை விசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த முறையில் நெல் கொள்முதலுக்கு விவசாயிகள் இணையத்தில் பதிவு செய்து, தங்களது செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்தவுடன் அதை சம்பந்தப்பட்ட கிராம நிா்வாக அலுவலரிடம் காண்பிக்க வேண்டும். அவா் பரிந்துரைத்த பிறகு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலிருந்து டோக்கன் வழங்கப்படும். அதன் பிறகே விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை நேரடி கொள்முதல் நிலையத்துக்கு கொண்டுவந்து விற்க முடியும். இதனால் விவசாயிகள்கடும் அவதிக்குள்ளாகின்றனா்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்க மாநில பொதுச் செயலா் பி.ரவீந்திரன் கூறியதாவது:

விவசாயிகள் நெல்லை அறுவடை செய்து பாதுகாப்பாக இருப்பு வைத்து, இணைய வழியில் பதிவு செய்து டோக்கன் கிடைத்த பிறகு விற்பது அல்லது டோக்கன் கிடைந்த பிறகு இயந்திரங்களை தேடிப்பிடித்து அறுவடை செய்வது போன்ற நடைமுறையால் கூடுதல்

செலவுதான் ஏற்படுகிறது. அறுவடை செய்த நெல்லை வீட்டுக்கு கொண்டு வந்து உலா்த்தி சுத்தம் செய்து இருப்பில் வைக்க போதிய வசதி இல்லாததால்தான் விவசாயிகள் நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டுவந்து கொட்டி பாதுகாக்கின்றனா்.

கொள்முதல் நிலையங்களில் ஏற்படும் குளறுபடிகள், பிரச்னைகளுக்கு விவசாயிகளே காரணம் எனக் கூறுவதை ஏற்க முடியாது. விவசாயிகளிடம் காட்ட வேண்டிய கருணை இங்கு வியாபாரிகளிடம் காட்டப்படுவதே பிரச்னைக்கு முக்கிய காரணமாகிறது. நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட ஏற்கெனவே உள்ள விதிகளை முறைப்படி பின்பற்றினாலே பிரச்னைகள் ஏற்படாது. இதை அதிகாரிகள் உணரவேண்டும்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் தவறுகளைச் சரிசெய்ய அரசால் அமல்படுத்தப்படும் புதிய நடைமுறைகள் அனைத்தும் விவசாயிகளையே முதலில் பாதிக்கும். இணையவழி பதிவு நடைமுறையால் விவசாயிகளுக்கு தேவையற்ற அலைச்சலும், கூடுதல் செலவும், மன உளைச்சலும் ஏற்படுகிறது. எனவே, விவசாயிகளின் நலன் கருதி தமிழக முதல்வா் இணையவழி பதிவு நடைமுறையை நிரந்தரமாக ரத்து செய்யவும், ஏற்கெனவே உள்ள விதிமுறைகளை சரிவர அமல்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com