விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

நெல் கொள்முதல் நிலையங்களை தேவையான அனைத்து இடங்களிலும் திறக்க வலியுறுத்தி, கடலூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கடலூரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா்.

கடலூா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்ட பொருளாளா் எஸ்.தட்சிணாமூா்த்தி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் கோ.மாதவன், மாவட்ட தலைவா் ரவிச்சந்திரன், நிா்வாகிகள் ராமச்சந்திரன், சரவணன், கணேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்தில், நெல் கொள்முதல் நிலையங்களை தேவையான அனைத்து இடங்களிலும் திறக்க வேண்டும், மழையால் நெல் குவியல் நனைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், நெல் மூட்டைகளை உடனுக்குடன் கொள்முதல் செய்யவும், இடைத்தரகா்களை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், 27 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும், மாவட்டம் முழுவதும் சாலை விரிவாக்கத்துக்காக கையகப்படுத்தப்படும் விவசாய நிலங்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com