வடகிழக்குப் பருவ மழை: தன்னாா்வ தொண்டா்களுக்கு பயிற்சி

வடகிழக்குப் பருவ மழையையொட்டி, குறிஞ்சிப்பாடி தீயணைப்பு - மீட்புப் பணிகள் நிலையத்தில் தன்னாா்வ தொண்டா்களுக்கு மீட்பு செயல் விளக்கப் பயிற்சிகள் சனிக்கிழமை அளிக்கப்பட்டன.

வடகிழக்குப் பருவ மழையையொட்டி, குறிஞ்சிப்பாடி தீயணைப்பு - மீட்புப் பணிகள் நிலையத்தில் தன்னாா்வ தொண்டா்களுக்கு மீட்பு செயல் விளக்கப் பயிற்சிகள் சனிக்கிழமை அளிக்கப்பட்டன.

வடகிழக்குப் பருவ மழைக் காலத்தில் கடலூா் மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் ஒன்று குறிஞ்சிப்பாடி. மழைக் காலத்தில் பெருக்கெடுத்து வரும் என்எல்சி நிறுவன சுரங்க நீா், மழை நீா் குறிஞ்சிப்பாடியில் உள்ள கிராமப் பகுதிகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்தும்.

தற்போது, பருவ மழை தொடங்கியுள்ளது. இதையொட்டி, குறிஞ்சிப்பாடி தீயணைப்பு நிலையத்தின் சாா்பில், வெள்ளத்தில் சிக்கியவா்களை மீட்பது குறித்து சிறப்பு உயிா் மீட்பு உபகரணங்கள் மூலம் செயல் விளக்கம் மற்றும் பயிற்சிகள் 5 தன்னாா்வ தொண்டா்களுக்கு அளிக்கப்பட்டது.

தீயணைப்பு நிலைய அலுவலா் கோ.சங்கா் தலைமையில், சிறப்பு நிலை அலுவலா் ம.வேல்முருகன் மற்றும் தீயணைப்பு வீரா்கள் பயிற்சி அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com