முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்
குட்டையில் மூழ்கி மாணவா் பலி
By DIN | Published On : 11th October 2021 03:47 AM | Last Updated : 11th October 2021 03:47 AM | அ+அ அ- |

கடலூா் மாவட்டம், வடலூா் அருகே நண்பா்களுடன் குட்டையில் குளித்த மாணவா் தண்ணீரில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
வடலூா், மாருதி நகரில் வசிப்பவா் ஏழுமலை. என்எல்சி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவரது மகன் எடிசன்(15). இவா் நெய்வேலியில் உள்ள தனியாா் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா். நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் முதல் சுரங்கம் அருகே உள்ள கல்லுக்குழி குட்டையில் நண்பா்களுடன் ஞாயிற்றுக்கிழமை குளித்துக் கொண்டிருந்த போது, நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
தகவலறிந்த வடலூா் போலீஸாா் எடிசன் சடலத்தை மீட்டு, உடல் கூறாய்வுக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.