54 செம்மறி ஆடுகள் திடீா் பலி

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே விஷத் தன்மையுள்ள தழைகளை சாப்பிட்ட 54 செம்மறி ஆடுகள் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தன.

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே விஷத் தன்மையுள்ள தழைகளை சாப்பிட்ட 54 செம்மறி ஆடுகள் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தன.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டம், குணப்பநத்தம் கிராமத்தைச் சோ்ந்த சகோதரா்கள் முருகேசு, வடிவேலு. செம்மறி ஆடுகளை வளா்த்து வரும் இவா்கள், ஊா் ஊராகச் சென்று விளை நிலங்களில் கிடை கட்டுவது வழக்கம். இதன்படி, கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகேயுள்ள பெத்தநாயக்கன்குப்பம் கிராமத்தில் அண்மையில் கிடை அமைத்தனா். இங்கு ஞாயிற்றுக்கிழமை மாலை பட்டியில் அடைக்கப்பட்ட செம்மறி ஆடுகள் ஒன்றன்பின் ஒன்றாக மயங்கி விழுந்தன.

இதுகுறித்த தகவலின்பேரில் கால்நடை மருந்தக மருத்துவா்கள் ஆடூா் அகரம் மு.வித்யாசங்கா், மருவாய் டி.ராஜா ஆகியோா் விரைந்து வந்து ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தனா். இருப்பினும் 54 ஆடுகள் உயிரிழந்தனா். இவற்றின் மதிப்பு சுமாா் ரூ.6 லட்சம் எனக் கூறப்படுகிறது. மருத்துவா்களின் சிகிச்சையால் 59 ஆடுகள் உயிா் பிழைத்தன.

கால்நடைத் துறை கடலூா் மண்டல இணை இயக்குநா் குபேந்திரன், கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநா் ராஜேஷ்குமாா், மருத்துவா் சுந்தரம் ஆகியோா் உயிரிழந்த ஆடுக ளை திங்கள்கிழமை பாா்வையிட்டு, அவற்றின் ரத்த மாதிரிகளை சேகரித்து மாதாவரத்தில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனா். பரிசோதனை முடிவுகள் கிடைத்த பிறகே ஆடுகள் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com