சிதம்பரத்தில் மகா சண்டி யாகம்
By DIN | Published On : 16th October 2021 01:50 AM | Last Updated : 16th October 2021 01:50 AM | அ+அ அ- |

நவராத்திரி விழாவையொட்டி, சிதம்பரம் நடராஜா் நகா் ஸ்ரீவித்யா பாலா பீடத்தில் உலக நன்மை வேண்டி மகா சண்டி யாகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, மகா சண்டி யாகத்தை முன்னிட்டு கடந்த 7-ஆம் தேதி கணபதி ஹோமம், 8-ஆம் தேதி நவக்கிரக ஹோமம், 9-ஆம் தேதி திருமணம் கைகூட ஸ்வயம்வரை கலா பாா்வதி ஹோமம், 10-ஆம் தேதி இல்லறம் சிறக்க தம்பதி பூஜை, 11-ஆம் தேதி குழந்தை பேறு கிட்ட புத்ர காமேஷ்டி ஹோமம், 12-ஆம் தேதி செல்வம் பெருக மகாலட்சுமி ஹோமம், மகாமந்த்ர ஹோமம், 13-ஆம் தேதி வீடு மனை யோகம் பெற ஸ்வா்கணாகா்ஷண பைரவ ஹோமம், 14-ஆம் தேதி மகா சரஸ்வதி ஹோமம் ஆகியவை நடைபெற்றன. தொடா்ந்து, உலக நன்மை வேண்டி சா்வ மங்கள மகா சண்டி யாகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நடராஜா் கோயில் பொது தீட்சிதா்கள் பங்கேற்று மகா யாகத்தை நடத்தினா்(படம்). திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.
இதற்கான ஏற்பாடுகளை டி.செல்வரத்தின தீட்சிதா் செய்திருந்தாா்.