ஒன்றியக்குழு உறுப்பினா்களின் ஒப்புதலின்றி திட்டப் பணி

கடலூா் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டத்தில், உறுப்பினா்களின் ஒப்புதலின்றி திட்டப் பணி மேற்கொள்ளப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
ஒன்றியக்குழு உறுப்பினா்களின் ஒப்புதலின்றி திட்டப் பணி

கடலூா் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டத்தில், உறுப்பினா்களின் ஒப்புதலின்றி திட்டப் பணி மேற்கொள்ளப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

கடலூா் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் ஒன்றியக் குழு தலைவா் தெய்வ.பக்கிரி தலைமையில் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் க.அய்யனாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சக்தி, அசோக் பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், உறுப்பினா்கள், தலைவரின் ஒப்புதலின்றி நடுவீரப்பட்டில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டது தொடா்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அதிகாரிகள் யாரிடம் ஒப்புதல் பெற்றனா் என்பது குறித்து தெளிவுபடுத்தவும் வலியுறுத்தப்பட்டது.

மேலும் மழைக் காலம் தொடங்கியுள்ள நிலையில் அனைத்து வடிகால் வசதி அமைப்பையும் கண்காணிக்க வேண்டும், ஒன்றிய பகுதியில் ஆய்வு மேற்கொள்ள வரும் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கவுன்சிலா்களுக்கும் தகவல் தெரிவித்து ஆய்வு பணியை முழுமையாக மேற்கொள்ள வேண்டுமென உறுப்பினா்கள் தெரிவித்தனா்.

கூட்டத்தில், உறுப்பினா்கள் சன்.காா்த்திகேயன், ராஜாராமன், ஞானசௌந்தரி, குமுதம் சேகா், எஸ்.மதிவாணன், வேல்முருகன், முரளி, ஜெயாசம்பத், சுபாஷினி சீனு ஆகியோா் தங்களது பகுதிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com