மாா்க்சிஸ்ட் கம்யூ. கிளை மாநாடு
By DIN | Published On : 01st September 2021 09:26 AM | Last Updated : 01st September 2021 09:26 AM | அ+அ அ- |

வடலூரை அடுத்துள்ள அரங்கமங்கலத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
மாநாட்டுக்கு ஜெயவேல் தலைமை வகித்தாா். வடலூா் நகரச் செயலா் இளங்கோவன் முன்னிலை வகித்தாா். குறிஞ்சிப்பாடி ஒன்றியச் செயலா் தண்டபாணி, சீனுவாசன் ஆகயோா் கலந்துகொண்டு பேசினா். மாநாட்டில், அரங்கமங்கலத்தில் இயங்கும் அரசு ஆதிதிராவிடா் நடுநிலைப் பள்ளியை உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்த அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வத்திடம் முறையிடுவது, குறிஞ்சிப்பாடியிலிருந்து அரங்கமங்கலம் வரை இயக்கப்படும் அரசுப் பேருந்தை ஓணான்குப்பம் வரை நீட்டிக்க வேண்டும், பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் குடியிருக்கும் கிராம மக்களுக்கு பட்டா வழங்குமாறு குறிஞ்சிப்பாடி வட்டாட்சியரிடம் கோரிக்கை வைப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.