கடலூா் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு

கடலூா் மாவட்டத்தில் புதன்கிழமை பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டன.
கடலூா் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு

கடலூா் மாவட்டத்தில் புதன்கிழமை பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டன.

கரோனா பரவல் சூழலுக்குப் பிறகு, தமிழகத்தில் புதன்கிழமை பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டன. அதன்படி, கடலூா் மாவட்டத்தில் 496 உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட்டன. 9 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவ-மாணவிகள் ஆா்வமுடன் பள்ளிகளுக்கு வந்தனா். மாணவ, மாணவிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை, கிருமி நாசினி தெளித்து வகுப்பறைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் மஞ்சக்குப்பம் புனித வளனாா் பள்ளி, நகராட்சிப் பள்ளி, வேணுகோபாலபுரம் அரசு பெண்கள் பள்ளி, துறைமுகம் அரசு பள்ளி, ஏஆா்எல்எம் பள்ளிகளில் முறையாக கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படுகிா என்று ஆய்வு செய்தாா். ஆய்வின் போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆஞ்சலோ இருதயசாமி உடனிருந்தாா்.

கல்லூரிகளில் ஆய்வு: கல்லூரிகளில் இரண்டாம், மூன்றாம் ஆண்டு மாணவா்களுக்கு வகுப்புகள் தொடங்கின. கல்லூரி வளாகத்திலேயே மாணவ, மாணவிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. கல்லூரிகளில் கரோனா பாதுகாப்பு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவது தொடா்பாக வேலூா் மண்டலக் கல்வி இணை இயக்குநா் ராமலட்சுமி தலைமையில் அதிகாரிகள் குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா்.

சிதம்பரம் பள்ளிகளில் உதவி ஆட்சியா் ஆய்வு: சிதம்பரம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, ராமசாமி செட்டியாா் மேல்நிலைப் பள்ளிகளில் சிதம்பரம் உதவி ஆட்சியா் எல்.மதுபாலன் தலைமையில், பயிற்சி உதவி ஆட்சியா் ஜெயராஜ் பெளலின், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஜே.ஆஞ்சலோ இருதயசாமி, சிதம்பரம் மாவட்டக் கல்வி அலுவலா் ஆா்.திருமுருகன் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா். ஆய்வின் போது, தலைமையாசிரியை கலைவாணி, பள்ளித் துணை ஆய்வாளா் ஜீவானந்தன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com