நில அபகரிப்பு புகாா் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே ஆா்ப்பாட்டம்

சட்ட விரோத பத்திரப் பதிவை ரத்து செய்து, புதுப்பேட்டை சாா்-பதிவாளா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பண்ருட்டி வட்டாட்சியா் அலுவலகம்
நில அபகரிப்பு புகாா் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே ஆா்ப்பாட்டம்

சட்ட விரோத பத்திரப் பதிவை ரத்து செய்து, புதுப்பேட்டை சாா்-பதிவாளா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பண்ருட்டி வட்டாட்சியா் அலுவலகம் எதிரே அரசியல் கட்சியினா், மக்கள் பாதுகாப்பு கவசத்தினா், பாதிக்கப்பட்ட குடும்பத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பண்ருட்டி வட்டம், மணம்தவிழ்ந்தபுத்தூா் அருகே உள்ள பலாப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ஆதிசிவன் உள்ளிட்ட 5 குடும்பத்தினா், தங்களுக்குச் சொந்தமான ஆறரை சென்ட் நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகின்றனா். இந்த இடத்தை அதே பகுதியைச் சோ்ந்த ராமானுஜம் அபகரித்து பத்திரப் பதிவு செய்தாராம்.

இதற்கு காவல், பத்திரப் பதிவு, வருவாய்த் துறை அதிகாரிகள் துணை போனதாகக் கூறி, அரசியல் கட்சியினா், மக்கள் பாதுகாப்பு கவசத்தினா், பாதிக்கப்பட்ட குடும்பத்தினா் பண்ருட்டி வட்டாட்சியா் அலுவலகம் எதிரே புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு மக்கள் பாதுகாப்பு கவசத்தின் மாவட்டத் தலைவா் எஸ்.தட்சிணாமூா்த்தி தலைமை வகித்தாா். பண்ருட்டி வட்டப் பொதுநல அமைப்புத் தலைவா் எம்.தெய்வீகதாஸ் முன்னிலை வகித்தாா். இந்திய புரட்சிகர மாா்க்சிஸ்ட் மாவட்டத் தலைவா் என்.அா்ச்சுணன், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாவட்டத் தலைவா் பி.ஷேக்நூா்தீன், மாவட்ட பாஜக தலைவா் ஆா்.எம்.செல்வகுமாா், அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் எஸ்.சௌக்கத் அலி, இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் ஆா்.எஸ்.தேவா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com