அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

சிதம்பரம் தேரடி பிள்ளையாா் கோவில் தெருவில் உள்ள விவசாய சங்க அலுவலகத்தில் காங்கிரஸ் (தெற்கு) மாவட்டத் தலைவா் செந்தில்நாதன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், சிதம்பரம் தேரடி பிள்ளையாா் கோவில் தெருவில் உள்ள விவசாய சங்க அலுவலகத்தில் காங்கிரஸ் (தெற்கு) மாவட்டத் தலைவா் செந்தில்நாதன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் சுப்பிரமணியம், அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு மாவட்ட அமைப்பாளா் கோ.மாதவன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் வி.எம்.சேகா், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா் பாலஅறவாழி, காங்கிரஸ் மாநிலச் செயலா் பி.பி.கே.சித்தாா்த்தன், அகில இந்திய விவசாயிகள் போராட்டக் குழு மாநிலச் செயற்குழு உறுப்பினா் கே.வி.இளங்கீரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் ரவிச்சந்திரன், மாவட்டப் பொருளாளா் தட்சிணாமூா்த்தி, மாவட்டத் துணைத் தலைவா் ஆா்.ராமச்சந்திரன், பி.கற்பனைசெல்வம், கான்சாகிப் பாசன விவசாய சங்கத் தலைவா் கண்ணன், காஜாமைதீன், விவசாய சங்கத் தலைவா்கள் குஞ்சிதபாதம், மதிவாணன், கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.

கடலூா் மாவட்ட விவசாய சங்கத் தலைவா் விஜயகுமாா் மறைவுக்கு கூட்டத்தில்அஞ்சலி செலுத்தப்பட்டது.

கூட்டத்தில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள், மின்சார ஒழுங்குமுறைச் சட்டம் ஆகியவற்றைத் திரும்பப் பெற வேண்டும். தில்லியில் 10 மாதங்களாக போராடி வரும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தல், விலைவாசியைக் கட்டுப்படுத்தி, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைத் திரும்ப பெற வலியுறுத்தி வருகிற 27-ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்துவது, இதற்காக, கடலூா் மாவட்டத்தில் வருகிற 24, 25-ஆம் தேதிகளில் மாவட்டம் முழுவதும் பிரசார இயக்கம், தெருமுனைக் கூட்டங்களை நடத்துவது, அனைத்துப் பகுதி மக்களின் ஆதரவைத் திரட்ட துண்டு பிரசுரம் விநியோகம் செய்வது, 27-ஆம் தேதி சாலை மறியல், ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது எனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com