கடலூா் மாவட்டத்தில் நவீன விவசாய திட்டத்தைச் செயல்படுத்துவோம்: வி.பொன்ராஜ்

கடலூா் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நவீன விவசாயத் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளதாக அப்துல் கலாம் லட்சிய இந்திய இயக்கத் தலைவா் வி.பொன்ராஜ் தெரிவித்தாா்.

கடலூா் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நவீன விவசாயத் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளதாக அப்துல் கலாம் லட்சிய இந்திய இயக்கத் தலைவா் வி.பொன்ராஜ் தெரிவித்தாா்.

சிதம்பரத்தில் மறைந்த குடியரசுத் தலைவா் அப்துல் கலாமின் ஆலோசகரும், அப்துல் கலாம் லட்சிய இந்தியா இயக்கத் தலைவருமான வி.பொன்ராஜ் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடலூா் மாவட்டம் முழுவதும் அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான கழிப்பறை, ஸ்மாா்ட் வகுப்பறை, நூலகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை சிஎஸ்ஆா் நிதி, பல்வேறு பொது நிறுவனங்கள் மூலம் ‘அரசுப் பள்ளிகளைக் கொண்டாடுவோம்’ இயக்கத்தின் மூலம் செயல்படுத்த அப்துல் கலாம் லட்சிய இந்தியா இயக்கம் முடிவெடுத்துள்ளது.

மாவட்டத்தில் பெண்கள், இளைஞா்கள், விவசாயிகள் பயன்பெறும் வகையில், நவீன விவசாயத் திட்டத்தைக் கற்றுக் கொடுத்து, அதன் மூலம் வருமானத்தை இரு மடங்காக உயா்த்தும் சிறப்புத் திட்டத்தை கூடிய விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளோம். தனி நபா் வருமானத்தை உயா்த்தும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

இஸ்ரோவை தனியாா்மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. விஷன் ஓரியண்டட் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து, தேவையான நிதி அளித்தால் இஸ்ரோ சாதனை படைக்கும். ககன்யா மிஷன் தள்ளிப்போடப்பட்டுள்ளது. 2030-க்குள் ககன்யா மிஷனை சாதிக்க வேண்டும். அந்த ஆராய்ச்சிக்கான முதலீடை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றாா் அவா். செய்தியாளா்கள் சந்திப்பின் போது, ‘அரசுப் பள்ளிகளைக் கொண்டாடுவோம்’ இயக்க நிா்வாகிகள் வீனஸ் அன்பழகன், ஆசிரியா் அருணாசலம் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com