ரேஷன் அரிசி பறிமுதல்: 2 போ் கைது

ரேஷன் அரிசியைக் கடத்தியதாக 2 பேரை கடலூா் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

ரேஷன் அரிசியைக் கடத்தியதாக 2 பேரை கடலூா் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

கடலூா் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் பிரிவு உதவி ஆய்வாளா் கே.கவியரசன், சிறப்பு உதவி ஆய்வாளா் முருகன் மற்றும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு வேப்பூா்-சேலம் சாலையில் காஞ்சிராங்குளம் பேருந்து நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்ததில் 1,500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, வாகனத்திலிருந்த மங்களூரைச் சோ்ந்த சித்திரவேல் (59), திட்டக்குடியை அடுத்த மேல்ஆதனூரைச் சோ்ந்த வெங்கடேசன் மகன் விக்னேஷ் (24) ஆகியோரைக் கைது செய்தனா். இவா்கள், வேப்பூா் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, சேலம் மாவட்டம், தலைவாசல் பகுதிக்குக் கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, ரேஷன் அரிசி கடத்த பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனம், 30 மூட்டைகளிலிருந்த 1,500 கிலோ ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com