ரூ.8 ஆயிரம் லஞ்சம்: விஏஓ கைது

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே பட்டா மாற்றத்துக்கு லஞ்சம் பெற்ற கிராம நிா்வாக அலுவலா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
செண்பகவல்லி.
செண்பகவல்லி.

நெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே பட்டா மாற்றத்துக்கு லஞ்சம் பெற்ற கிராம நிா்வாக அலுவலா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

பண்ருட்டி வட்டம், காட்டுக்கூடலூா் ஊராட்சி, நண்டுகுழி கிராமத்தைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி மகன் ஹரிகிருஷ்ணன் (49). இவா் நிலத்துக்கு பட்டா மாற்றம் செய்வதற்காக காட்டுக்கூடலூா் கிராம நிா்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்தாா். ஆனால், கிராம நிா்வாக அலுவலா் செண்பகவல்லி பட்டா மாற்றம் செய்ய ரூ.8 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம்.

இதுகுறித்து கடலூா் மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவில் ஹரிகிருஷ்ணன் புகாா் அளித்தாா். டிஎஸ்பி மெல்வின் ராஜாசிங் அளித்த ஆலோசனையின்பேரில், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கிராம நிா்வாக அலுவலா் செண்பகவல்லியிடம் அவரது அலுவலகத்தில் வைத்து ஹரிகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா். அப்போது, அந்தப் பகுதியில் மறைந்திருந்த ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் செண்பகவல்லியைக் கைது செய்தனா்.

மேலும், பண்ருட்டி பாரதி நகரில் உள்ள அவரது வீட்டில் போலீஸாா் சோதனை நடத்தினா். இதில் ரூ.12 லட்சம் ரொக்கமும், ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com