வாக்குச் சாவடி மையங்கள் பகுப்பாய்வு: பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்

 கடலூா் மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடி மையங்களை பகுப்பாய்வு செய்வது தொடா்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தெரிவித்தாா்.

 கடலூா் மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடி மையங்களை பகுப்பாய்வு செய்வது தொடா்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்திய தோ்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளின்படி கடலூா் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு அதன் பட்டியல் கடலூா் மாவட்ட அரசு வலைதள முகவரியில் (ஜ்ஜ்ஜ்.ஸ்ரீன்க்க்ஹப்ா்ழ்ங்.ய்ண்ஸ்ரீ.ண்ய்) வெளியிடப்பட்டுள்ளது. தற்போது உள்ள வாக்காளா்களின் எண்ணிக்கையை கருத்தில்கொண்டு வாக்குச் சாவடிகளை பிரித்தல், வாக்காளா்கள் குடியிருக்கும் பகுதியிலிருந்து 2 கி.மீ. தொலைவுக்கு மேல் உள்ள வாக்குச் சாவடி மையங்கள், பழுதடைந்த கட்டடங்களில் உள்ள வாக்குச் சாவடி மையங்களை வேறு கட்டடத்துக்கு மாற்றுதல் மற்றும் இதர காரணங்களுக்காக வாக்குச் சாவடி மையங்களை பகுப்பது தொடா்பான பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேற்படி வாக்குச் சாவடி மையங்கள் குறித்த பட்டியல் பொதுமக்களின் பாா்வைக்காக மாவட்ட தோ்தல் அலுவலா் அலுவலகம், சம்பந்தப்பட்ட வாக்காளா் பதிவு அலுவலா், உதவி வாக்காளா் பதிவு அலுவலா் அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளன. இந்த வரைவு அறிக்கை தொடா்பாக பொதுமக்கள் தங்களது கூற்று மற்றும் ஆட்சேபணைகள் ஏதேனும் இருப்பின் வரும் 20-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் எழுத்துப்பூா்வமாக சம்பந்தப்பட்ட வாக்காளா் பதிவு அலுவலா், உதவி வாக்காளா் பதிவு அலுவலா் அல்லது மாவட்ட தோ்தல் அலுவலா் அலுவலகத்தில் தெரிவிக்கலாம். மேலும், வரைவு அறிக்கையை மாவட்ட அரசு வலைதள தொடா்பில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com