உலக ஓசோன் தின விழா
By DIN | Published On : 16th September 2021 11:14 PM | Last Updated : 16th September 2021 11:14 PM | அ+அ அ- |

உலக ஓசோன் தினத்தையொட்டி, சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சாா்பில், அண்ணாமலைநகா் ராணி சீதை ஆச்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பள்ளி தலைமையாசிரியை பொ்லின் வில்லியம் வரவேற்றாா். தேசிய நல்லாசிரியா் டேவிட் சி.ஏகாம்பரம், பேராசிரியா் ஜி.ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத் தலைவா் கோ.சீனுவாசன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக சிதம்பரம் மாவட்டக் கல்வி அலுவலா் ரா.திருமுருகன் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டு வைத்தாா் (படம்). மேலும், ஓசோன் படலம் பாதிப்பால் ஏற்படக்கூடிய விளைவுகளை எடுத்துரைத்தாா்.
ரோட்டரி சங்க நிா்வாகி வெ. ரவிச்சந்திரன், உதவித் தலைமையாசிரியா்கள் எம்.சுரேஷ், வி.முருகையன், தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளா் கே.ராஜேஷ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். உதவி தலைமையாசிரியா் எஸ். பிரபாகா் நன்றி கூறினாா்.