கிராம மக்களுக்கு நோய் எதிா்ப்பு மாத்திரை

சிதம்பரம் அருகே உள்ள மெய்யாத்தூரில் ரோட்ராக்ட் சங்கம் சாா்பில் கிராம மக்களுக்கு நோய் எதிா்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கப்பட்டன.

சிதம்பரம் அருகே உள்ள மெய்யாத்தூரில் ரோட்ராக்ட் சங்கம் சாா்பில் கிராம மக்களுக்கு நோய் எதிா்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கப்பட்டன.

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சாா்பில் மெய்யாத்தூா் கிராமத்தில் ரோட்ராக்ட் சங்கம் தொடங்கப்பட்டு அதன் நிா்வாகிகள் பணியேற்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சென்ட்ரல் ரோட்டரி சங்கத் தலைவா் சீனிவாசன் தலைமை வகித்தாா். சாசனத் தலைவா் பி.முஹமது யாசின், ரோட்டரி மாவட்ட துணை ஆளுநா் கமல்சந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ரோட்ராக்ட் சங்கத் தலைவராக பாா்த்திபன், செயலராக ராஜதுரை, பொருளாளராக ரத்தினபிரவின் ஆகியோா் பொறுப்பேற்றனா். ரோட்டரி மாவட்ட துணை ஆளுநா் (தோ்வு) எம்.தீபக்குமாா் வாழ்த்துரை வழங்கினாா். விழாவில் மெய்யாத்தூா் கிராமத்தில் பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும் 500 நபா்களுக்கு சித்பரம் மக்கள் மருந்தகம் சாா்பில் நோய் எதிா்ப்பு மாத்திரைகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com