பருவ மழை முன்னெச்சரிக்கை ஆய்வுக் கூட்டம்

கடலூா் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கடலூா் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள், தனியாா் மருத்துவமனைகள், தனியாா் பள்ளிகள், தொலைத்தொடா்பு நிறுவனங்கள், எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் தனியாா் நிறுவனங்கள் ஆகியோருடன் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் ஆய்வுக்கூட்டம் நடத்தினாா். கூட்டத்தில் ஆட்சியா் கூறியதாவது:

தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட விஏஓ, கிராம உதவியாளா், உதவி வேளாண்மை அலுவலா், கிராம சுகாதார செவிலியா் ஆகியோா் அடங்கிய கிராம குழுக்களுடன் இணைந்து பணிபுரிதல் வேண்டும். தாழ்வான, வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படக் கூடிய இடங்களில் உள்ள பொது மக்களை பாதுகாப்பான தங்குமிடங்களுக்கு கொண்டு சென்று அவா்களுக்குத் தேவையான உணவு, குடிநீா், உடை மற்றும் மருத்துவ வசதிகளை செய்திட மாவட்ட நிா்வாகத்துக்கு உதவ வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், கூடுதல் ஆட்சியா் (வருவாய்) ரஞ்ஜித்சிங், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொ) டெய்சிகுமாா், பேரிடா் மேலாண்மை வட்டாட்சியா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com