நீட் விலக்கு மசோதா: குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கக் கோரி  காங்கிரஸ் போராட்டம்

தமிழ்நாடு சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு கோரும் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி சிதம்பரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் தொடர் முழக்கப்
சிதம்பரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்.
சிதம்பரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்.

தமிழ்நாடு சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு கோரும் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி சிதம்பரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது.

சிதம்பரம் தெற்கு சன்னதி அருகே தமிழக சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட  நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு நிரந்தர விலக்கு கோரும் மசோதாவை தமிழக ஆளுநர் உடனடியாக குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைக்க கூறியும் இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்க வலியுறுத்தியும் தமிழக காங்கிரஸ் கமிட்டி ஆர்.டி.ஐ துறை சார்பில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆர் .டி.ஐ துறை மாநில பொது செயலாளர் பி.எ ஸ்டிபன் முத்துப்பாண்டி தலைமை வகித்தார்.ஜெமினி எம். என் .ராதா வரவேற்றார். தில்லை ஆர்.மக்கின் ரஜா. சம்பத்குமார் ஆர்.சம்மந்தமூர்த்தி செய்யது மிஸ்கின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் என்.வி. செந்தில்நாதன் மாநில செயலாளர் பி.பி.கே. சித்தார்த்தன் அமீரக காங்கிரஸ் தலைவர் டாக்டர் ஏ.எஸ். அப்துல் மாலிக் ஆகியோர் கலந்துகொண்டு நீட் தேர்வு விலக்கு மசோதா குறித்து பேசினார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர் ஜெயச்சந்திரன் மாநில பொதுக்குழு உறுப்பினர் பி வெங்கடேசன் ஆர்.வி சின்ராஜ் முன்னாள் நகர தலைவர்கள் எ.நூர்அலி ஜி. ஆறுமுகம் ஆட்டோ.டி.குமார் என்.இளங்கோவன் டி.பட்டாபிராமன் சம்பந்தம் பேன்சி எஸ்.ஏஸ் நடராஜன் ராஜ்குமார் முத்துசாமி குமரவேல் கீரப்பாளையம் வட்டாரத்தலைவர் செழியன் சுந்தராஜன் ஷர்மா நடராஜன் நாராயணசாமி காங்கிரஸ் ஆர்.டி.ஐ துறை சிதம்பரம் நகர தலைவர் விக்னேஷ் மாவட்ட நிர்வாகி ஜெயச்சந்திரன் காங்கிரஸ் ஆர்.டி.ஐ துறையை சார்ந்த சிதம்பரம் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் சையத் அபு சதாம் சிதம்பரம் நகர இணை தலைவர் அசோக்குமார் சிதம்பரம் நகர பொது செயலாளர் மணி ரூபன்மாவட்டநிர்வாகிகள் ரஞ்சித் விக்னேஷ் பாலாஜி நகர செயலாளர் சுந்தரராஜன்  கிருஷ்ணமுர்த்தி  மகளிர் அணியைச் சேர்ந்த தில்லைச் செல்வி  ஜனகம் மாலா ருக்குமணி உட்படம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

இந் நிகழ்ச்சியின் முடிவில் கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மணிமாறன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com