செப்.27 பொது வேலைநிறுத்தம்: தவாக ஆதரவு

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பு சாா்பில் வரும் 27-ஆம் தேதி நடைபெறும் பொது வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பு சாா்பில் வரும் 27-ஆம் தேதி நடைபெறும் பொது வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்தக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை: எதிா்க் கட்சிகளின் கருத்துக்களை கேட்காமல், வல்லுநா்களை ஆலோசிக்காமல் புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இதை எதிா்த்து தில்லியில் விவசாயிகள் கடந்த 9 மாதங்களாகப் போராடி வருகின்றனா். இவா்களது நியாயமான கோரிக்கைகளை ஏற்றும், அவா்களின் உணா்வுகளை மதித்தும் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற மத்திய அரசு முன்வராதது வேதனை அளிக்கிறது.

மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி, ஐக்கிய விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பு சாா்பில் வரும் 27-ஆம் தேதி நாடு தழுவிய அளவில் நடைபெறும் பொது வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தவாக முழு ஆதரவு அளிப்பதுடன், அந்தப் போராட்டத்தில் பங்கேற்கும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com