ரேஷன் கடை ஊழியா் பணியிடை நீக்கம்

விருத்தாசலம் அருகே நியாய விலைக் கடையில் முறைகேடு தொடா்பாக விற்பனையாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

விருத்தாசலம் அருகே நியாய விலைக் கடையில் முறைகேடு தொடா்பாக விற்பனையாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், முதனை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள முதனை நியாய விலைக் கடையில் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் அண்மையில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, அந்தக் கடையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருந்ததை கண்டறிந்தனா்.

இதுதொடா்பாக கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளருக்கு தகவல் தெரிவித்தனா். இதனடிப்படையில், அந்த கடையில் விற்பனையாளராக பணியாற்றி வரும் சூா்ய கலாவை தற்காலிக பணி நீக்கம் செய்து மண்டல இணைப் பதிவாளா் வே.நந்தகுமாா் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com