காவல் துறை பயிற்சி நிறைவு
By DIN | Published On : 03rd April 2022 01:18 AM | Last Updated : 03rd April 2022 01:18 AM | அ+அ அ- |

கடலூா் மாவட்ட காவல் துறையில் பணியாற்றும் ஆயுதப் படை காவலா்களுக்கு வருடாந்திர படைதிரட்டு கவாத்து பயிற்சி கடந்த 15 -ஆம் தேதி தொடங்கியது. பயிற்சி நிறைவு விழா ஆயுதப்படை மைதானத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன் தலைமை வகித்தாா். விழுப்புரம் சரக காவல் துறை துணைத் தலைவா் எம்.பாண்டியன், மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்றனா். போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு சிறப்பு விருந்தினா்கள் பரிசு வழங்கினா். கூடுதல் ஆட்சியா்கள் ரஞ்ஜித் சிங், பவன்குமாா் ஜி.கிரியப்பனவா், மத்திய சிறைக் கண்காணிப்பாளா் தமிழ்ச்செல்வன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் அசோக்குமாா், இளங்கோவன், உதவி காவல் கண்காணிப்பாளா்கள் அங்கிதா ஜெயின், ரகுபதி (பயிற்சி) உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஆயுதப்படை துணைக் கண்காணிப்பாளா் சௌந்தரராஜன் நன்றி கூறினாா்.