உலக சுகாதார தின விழா
By DIN | Published On : 08th April 2022 09:52 PM | Last Updated : 08th April 2022 09:52 PM | அ+அ அ- |

சிதம்பரம் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் சிதம்பரம் நகர ஆரம்ப சுகாதார மையத்தில் உலக சுகாதார தினம் அண்மையில் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில், கரோனா தடுப்பூசி மைய பணியாளா்களுக்கு சுகாதார பொருள்கள் அடங்கிய தொகுப்புகள், கிருமிநாசினி திரவம் வழங்கப்பட்டது (படம்). அரசு நகா்புற சுகாதார மைய மருத்துவா் கே.ஹேமலதா, செஞ்சிலுவை சங்கத் தலைவா் ஆா்.ராஜேந்திரன், செயலா் கே.ஜி.நடராஜன், பொருளாளா் கமல்சந்த் கோத்தாரி, மேலாண்மைக் குழு உறுப்பினா் சி.இளங்கோவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.