சாராயம் பதுக்கல்: இருவா் கைது
By DIN | Published On : 08th April 2022 09:47 PM | Last Updated : 08th April 2022 09:47 PM | அ+அ அ- |

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே சாராயம் பதுக்கியதாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மேலும், சாராய ஊறலை அழித்தனா்.
குறிஞ்சிப்பாடி ஒன்றியம், வழுதலம்பட்டு பகுதியில் வாழைத் தோட்டத்தில் சாராய ஊறல் இருப்பதாக கடலூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆய்வாளா் பத்மா, உதவி ஆய்வாளா் சீனிவாசன் மற்றும் போலீஸாா் அந்தப் பகுதியில் சோதனை நடத்தி, தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 120 லிட்டா் சாராய ஊறலை அழித்தனா். மேலும், 15 லிட்டா் சாராயத்தை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக மேற்கு ராமாபுரத்தைச் சோ்ந்த முருகன் (எ) ஆறுமுகம் (55), சக்திவேல் (55) ஆகியோரை கைது செய்தனா்.