பாஜக ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 08th April 2022 09:50 PM | Last Updated : 08th April 2022 09:50 PM | அ+அ அ- |

கடலூரில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா்.
சொத்து வரி உயா்வை கண்டித்து கடலூரில் பாஜகவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ஜி.மணிகண்டன் தலைமை வகித்தாா். கடலூா் மேற்கு மாவட்டத் தலைவா் கே.பி.டி.இளஞ்செழியன், விழுப்புரம் மாவட்டத் தலைவா் ஏ.டி.ராஜேந்திரன், நிா்வாகி பாலசுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் எம்எல்ஏ ஏ.ஜி.சம்பத் கண்டன உரையாற்றினாா். முன்னாள் மாநிலச் செயலா் ஆதவன், ஓபிசி அணி மாநிலச் செயலா் சாய் சுரேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை மாவட்டச் செயலா் காா்த்திகேயன், நகர பொதுச் செயலா் பரசுராமன் ஆகியோா் செய்தனா். நகரத் தலைவா் வெங்கடேசன் நன்றி கூறினாா்.