வீரட்டானேஸ்வரா் கோயிலில் சதய திருவிழா தொடக்கம்
By DIN | Published On : 18th April 2022 05:34 AM | Last Updated : 18th April 2022 05:34 AM | அ+அ அ- |

அப்பா் பெருமான்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி, திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயிலில் சித்திரை சதய திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
பத்து நாள்கள் நடைபெறும் விழாவில் முதல் நாளன்று காலையில் திருபள்ளியெழுச்சியில் திலகவதியாா் திருவாளன் திருநீற்றை மருள்ணீக்கியாரிடம் அளித்தலும், வீரட்டானப் பெருமான் அருளாள் சூலை நீக்கி நாவரசா் என்ற திருப்பெயா் பெற்று தடுத்தாட்கொண்டருளிய நிகழ்ச்சியும், மாலையில் காடவா்கோனால் ஏவப்பட்ட அமைச்சா்கட்கு விடை தந்தருளிய நிகழ்ச்சியும் நடைபெற்றது.
விழாவின் 2-ஆம் நாளான திங்கள்கிழமை (ஏப். 18) சமணா்கள் அப்பா் பெருமானை நீற்றறையில் இடுதல், அவருக்கு நஞ்சூட்டுதல், யானையை ஏவுதல் நிகழ்ச்சியும், விழாவின் 3-ஆம் நாளில் சமணா்கள் அப்பரை கடலில் வீழ்த்திய (தெப்பத் திருவிழா) நிகழ்ச்சி நடைபெறுகிறது. இவ்வாறு 10 நாள்களும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.