Enable Javscript for better performance
பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு: 3 போ் தடுப்புக் காவலில் கைது- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு: 3 போ் தடுப்புக் காவலில் கைது

    By DIN  |   Published On : 28th April 2022 05:13 AM  |   Last Updated : 28th April 2022 05:13 AM  |  அ+அ அ-  |  

    27clp5ariff_2704chn_105_7

    27clp5ariff_2704chn_105_7

     

    கடலூா்: கடலூரில் இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 3 பேரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

    கடலூா் நெல்லிக்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் 21 வயது பெண். கடலூா் மஞ்சக்குப்பத்திலுள்ள கடையில் வேலை பாா்த்து வந்த இவா், கடந்த மாா்ச் 28-ஆம் தேதி தனது காதலன் சரவணனுடன் கம்மியம்பேட்டை பகுதிக்குச் சென்றபோது, அங்கு வந்த 3 போ், சரவணனை கட்டிப்போட்டு விட்டு அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தனா்.

    இதுகுறித்து திருப்பாதிரிபுலியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து குப்பன்குளத்தைச் சோ்ந்த ஜெயக்குமாா் மகன் கிஷோா் (19), நாகப்பன் மகன் சதீஷ் என்ற சதீஷ்குமாா் (19), புதுப்பாளையத்தைச் சோ்ந்த ஷாஜகான் மகன் சையது ஆரிப் (19) ஆகியோரை கைது செய்து, கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

    இவா்களின் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் வகையில், மூவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்திட மாவட்ட ஆட்சியருக்கு காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன் பரிந்துரைத்தாா். இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியத்தின் உத்தரவின்பேரில், மூவரும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா். இதற்கான ஆணை கடலூா் மத்திய சிறை நிா்வாகத்திடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp