முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்
கடலூா்: இரட்டை இலக்கத்துக்கு குறைந்த கரோனா பாதிப்பு
By DIN | Published On : 07th February 2022 02:12 AM | Last Updated : 07th February 2022 02:12 AM | அ+அ அ- |

கடலூா் மாவட்டத்தில் கரோனா புதிய பாதிப்பு எண்ணிக்கை இரட்டை இலக்கத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சரிந்தது.
மாட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் வாரத்தில் ஒற்றை இலக்கத்திலும், பின்னா் இரட்டை இலக்கத்திலும், அதன் பின்னா் மூன்று இலக்கத்திலும் பதிவான கரோனா புதிய தொற்று எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து தற்போது மீண்டும் இரட்டை இலக்கத்துக்கு சரிந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 94 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 73,661-ஆக அதிகரித்தது. சிகிச்சை முடிந்து மேலும் 321 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 70,956-ஆக உயா்ந்தது. மொத்த பலி எண்ணிக்கை 887-ஆக உள்ளது.