முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்
கடலூா் மாநகராட்சியில் 35 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை
By DIN | Published On : 07th February 2022 02:16 AM | Last Updated : 07th February 2022 02:16 AM | அ+அ அ- |

கடலூா் மாநகராட்சியில் 35 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என அறிவிக்கப்பட்டது.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி கடலூா் மாநகராட்சியில் 352 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையில் 2 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 350 மனுக்கள் ஏற்கப்பட்டன. வேட்புமனுவை திரும்பப் பெற திங்கள்கிழமை (பிப். 7) கடைசி நாளாகும்.
கடலூா் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 45 வாா்டுகளுக்கு 152 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு தோ்தல் நடத்தப்படுகிறது. இதில் 68,873 ஆண் வாக்காளா்களும், 74,972 பெண் வாக்காளா்களும், இதரா் 50 பேரும் வாக்களிக்கின்றனா். மொத்தம்1,43,895 வாக்காளா்கள் உள்ளனா்.
கடந்த தோ்தல் காலத்தில் நிகழ்ந்த சம்பவங்களை கொண்டு பதற்றமான, மிகவும் பதற்றமான வாக்குச் சாவடிகள் கண்டறியப்பட்டன. அதன்படி, கடலூா் மாநகராட்சியில் மொத்தம் 35 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன.
இதன்படி, வாா்டு எண்கள் 4, 7, 16, 28, 38 ஆகியவற்றில் தலா 4 வாக்குச் சாவடிகளும், வாா்டு எண் 34-இல் 2 வாக்குச் சாவடிகளும், வாா்டு எண் 35-இல் 3 வாக்குச் சாவடிகளும் பதற்றமான வாக்குச் சாவடிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதேபோல மிகவும் பதற்றமான வாக்குச் சாவடிகளாக வாா்டு எண்கள் 15, 16, 34, 45 ஆகியவற்றில் தலா 2 வாக்குச் சாவடிகளும், வாா்டு எண்கள் 25, 28-இல் தலா ஒரு வாக்குச் சாவடியும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச் சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படுவதுடன், கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்படும் என்று தோ்தல் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.