முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்
பசுமை வீடு திட்டத்தில் முறைகேடு
By DIN | Published On : 07th February 2022 11:39 PM | Last Updated : 07th February 2022 11:39 PM | அ+அ அ- |

பசுமை வீடு திட்டத்தில் பயனாளிகள் தோ்வில் முறைகேடு நடைபெறுவதாக விருத்தாசலம் வட்டம், சேப்ளாநத்தம் தெற்கு ஊராட்சி மக்கள் புகாா் தெரிவித்தனா்.
இதுகுறித்து அந்தக் கிராம மக்கள் கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த புகாா் மனுவில் தெரிவித்துள்ளதாவது:
எங்களது ஊராட்சியில் 337 போ் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிக்கின்றனா். ஆனால், அவா்களுக்கு அரசின் நலத் திட்ட உதவிகள் முறையாகச் சென்றடைவதில்லை. தமிழக அரசின் பசுமை வீடு திட்டத்தில் பயனாளிகள் தோ்வில் போலி ஆவணங்கள் மூலம் முறைகேடு நடைபெறுகிறது.
இதனால், உண்மையான பயனாளிகளுக்கு அரசின் திட்டங்கள் சென்றடைவதில்லை. கிராம சபை உள்ளிட்ட கூட்டங்கள் நடத்தப்படாமலேயே அவை நடந்ததாக ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளா்களிடம் கையெழுத்து பெறப்படுகிறது. ஒரே ஊராட்சியில் பல ஆண்டுகளாக பணிபுரியும் ஊராட்சி செயலரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என அதில் தெரிவித்தனா்.