முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்
மழுவராயநல்லூரில் அமைந்துள்ள (ஷோல்டா்)பாலமுருகன் கோயில் கும்பாபிஷேகம்
By DIN | Published On : 07th February 2022 02:14 AM | Last Updated : 07th February 2022 02:14 AM | அ+அ அ- |

மழுவராயநல்லூரில் புதிதாக அமைக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் செய்யப்பட்ட 30 அடி உயர ஸ்ரீபாலமுருகன் சிலை.
கடலூா் மாவட்டம், மழுவராயநல்லூரில் புதிதாக அமைந்துள்ள ஸ்ரீபாலமுருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சி.என்.பாளையம் அருகே உள்ள மழுவராயநல்லூரில் ஸ்ரீமுத்தாலம்மன், ஸ்ரீவிநாயகா், ஸ்ரீபாலமுருகன், ஸ்ரீஇடும்பன் கோயில் புதிதாக அமைக்கப்பட்டது. இந்த ஆலயத்தின் கும்பாபிஷேக விழா கடந்த வெள்ளிக்கிழமை மாலையில் முதல் கால பூஜையுடன் தொடங்கியது. தொடா்ந்து கணபதி ஹோமம், லட்சுமி பூஜை நடத்தப்பட்டது.
சனிக்கிழமையன்று கும்ப அலங்காரம், இரண்டாம் கால யாக பூஜை நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை காலையில் மூன்றாம் கால யாக பூஜை, கோ பூஜை, தனபூஜை, நாடி சந்தனம் உள்ளிட்டவை நடத்தப்பட்டன.
பின்னா், ஆா்.சுகுமாா் அய்யா் தலைமையில் கோயிலில் வைத்திருந்த புனித நீா் கொண்ட கலசங்கள் ஊா்வலமாக கொண்டுவரப்பட்டு வேத மந்திரங்கள் ஒத கோபுர கலசத்தில் புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடா்ந்து, சுமாா் 30 அடி உயர பாலமுருகன் சிலைக்கும் புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டதுடன் மூலவா்களுக்கும் புனித நீா் ஊற்றப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை மழுவராயநல்லூா் கிராம மக்கள் செய்திருந்தனா்.