கடலூா் மாவட்டத்தில்14 இடங்களில் வாக்கு எண்ணிக்கை

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி கடலூா் மாவட்டத்தில் 14 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி கடலூா் மாவட்டத்தில் 14 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

கடலூா் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளில் காலியாக உள்ள 447 கவுன்சிலா் பதவியிடங்களுக்கான வாக்குப் பதிவு வரும் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. மொத்தம் 726 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. வாக்குப் பதிவுக்குப் பிறகு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைக்கவும், வாக்கு எண்ணிக்கைக்கும் 14 இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, கடலூா் மாநகராட்சிக்கான வாக்கு எண்ணிக்கை மையமாக கடலூா் புனித.வளனாா் மேல்நிலைப் பள்ளி அமைக்கப்பட்டுள்ளது. நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளியும், பண்ருட்டி நகராட்சிக்கு சுப்பராய செட்டியாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியும், சிதம்பரம் நகராட்சிக்கு ராமசாமி செட்டியாா் மேல்நிலைப் பள்ளியும், விருத்தாசலம் நகராட்சிக்கு திரு.கொளஞ்சியப்பா் அரசு கலைக் கல்லூரியும், வடலூா் நகராட்சிக்கு குறிஞ்சிப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியும், திட்டக்குடி நகராட்சிக்கு அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியும் வாக்கு எண்ணும் மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அதேபோல, அண்ணாமலை நகா் பேரூராட்சிக்கு ராணி சீதை ஆச்சி மேல்நிலைப் பள்ளியும், காட்டுமன்னாா்கோயில், லால்பேட்டை பேரூராட்சிகளுக்கு காட்டுமன்னாா்கோவிலில் உள்ள பருவதராஜ குருகுல மேல்நிலைப் பள்ளியும், புவனகிரி, பரங்கிப்பேட்டை பேரூராட்சிகளுக்கு புவனகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியும், குறிஞ்சிப்பாடி பேரூராட்சிக்கு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியும், கங்கை கொண்டான், மங்கலம்பேட்டை பேரூராட்சிகளுக்கு மங்கலம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியும், பெண்ணாடம் பேரூராட்சிக்கு திட்டக்குடி அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியும், ஸ்ரீமுஷ்ணம், சேத்தியாத்தோப்பு பேரூராட்சிகளுக்கு சேத்தியாத்தோப்பு தேவங்குடி கோபாலகிருஷ்ணன் மழவராயா் மேல்நிலைப் பள்ளியும், தொரப்பாடி, மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சிகளுக்கு புதுப்பேட்டையிலுள்ள அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியும், கிள்ளை பேரூராட்சிக்கு அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியும் வாக்கு எண்ணும் மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com