குழந்தைகளுக்கான விடுதிகளுக்கு பதிவு கட்டாயம்: கடலூா் ஆட்சியா்

கடலூா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பெண்கள், குழந்தைகளுக்கான விடுதிகள் கட்டாயம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தெரிவித்தாா்.

கடலூா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பெண்கள், குழந்தைகளுக்கான விடுதிகள் கட்டாயம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலூா் மாவட்டத்தில் செயல்படும் பெண்கள், குழந்தைகளுக்கான விடுதிகள் தமிழ்நாடு மகளிா் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள், காப்பகங்கள் ஒழுங்குமுறைப்படுத்தும் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு பதிவு உரிமம் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு பதிவு உரிமம் பெறாமல் விடுதி நடத்தப்பட்டால் சட்ட விதிகளின்படி அபராதம் விதித்து தண்டனை வழங்கப்படும்.

விடுதிகள் பதிவு உரிமம் குறித்தான விளக்கங்கள், விடுதிக்கான கருத்துரு சமா்பிக்க மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரை 04142-221080 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என அதில் ஆட்சியா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com